18-12-2024 12:00 - 18-12-2026 12:00
சபையின் பிறப்பு
1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் 2017.11.02 ஆம் திகதி விசேட வர்த்தமானி இலக்கம் 2043-57 இன் படி 20.03.2018 அன்று நோர்வூட் பிரதேச சபை புதிய பிரதேச சபையாக ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முதலாவது செயலாளராக 20.03.2018 அன்று திருமதி ஏ.பிரியதர்ஷினி பொறுப்பேற்றார்.
முதல் சபைத் தலைவர்
நோர்வூட் பிரதேச சபையின் முதலாவது கௌரவத் தலைவராக திரு.தங்கராஜ் கிஷோர்குமார் கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் அவர் 10.04.2018 முதல் 30.05.2018 வரை கடமையாற்றினார்.
புதிய சபைத் தலைவர்
அடுத்து நோர்வூட் பிரதேச சபையின் கௌரவ தலைவராக திரு.கணபதி குழந்தைவேல் ரவி அவர்கள் 04.06.2018 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய செயலாளர்
நோர்வூட் பிரதேச சபையின் புதிய செயலாளராக திரு.கே.முரளிதரன் அவர்கள் 26.06.2019 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய இடமாற்றம்
01.07.2019 அன்று நோர்வூட் பிரதேச சபை புளியவத்தை நகரிலிருந்து டின்சின் நகரில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
